நடிகை அமலாபாலுடன் விவாகரத்தா? டைரக்டர் விஜய் பேட்டி

Share it:
அமலாபாலுடன் விவகாரத்து செய்துவிட்டீர்களா? என்ற கேள்விக்கு இயக்குனர் விஜய் பதிலளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அமலாபால். 2010–ம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். ‘சிந்துசமவெளி’, ‘மைனா’, ‘தெய்வத்திருமகன்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தனுசுடன் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார்.
அமலாபால், டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து டைரக்டர் விஜய் இயக்கிய ‘தலைவா’ படத்திலும் அமலாபால் நடித்தார்.

இரண்டு பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 7–ந்தேதி கொச்சியில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. அதே மாதம் 12–ந்தேதி சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சென்னை போர்ட் கிளப்பில் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் அமலாபாலுக்கும் அவரது கணவர் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை இருவருமே மறுக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு அமலாபாலின் பேஸ்புக்கில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தினமும் பதிவிடப்பட்டு வரும். ஆனால் சமீபத்தில் இத்தகைய படங்களை அமலாபால் பேஸ்புக்கில் பதிவு செய்யவில்லை. இது இருவருக்கும் இடையேயான விரிசலை வெளிக்காட்டியது.

இது உண்மை தான் என்பது இப்போது வெளியாகி உள்ளது. அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமூகமாக பேசி பிரிந்து விட்டனர். தொடர்ந்து அவர்கள் கோர்ட்டு மூலம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

அமலாபால் – விஜய் விவகாரத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்தார். இதை விஜய்யின் பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறார். இதன் காரணமாகவே அவர் விவகாரத்து முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

இதுபற்றி அமலாபாலின் கணவர் டைரக்டர் விஜய் கூறியிருப்பதாவது:–

இந்த பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அதில் உறுதியாகவும் இருப்பேன். அமலாபால் பற்றி எதுவும் கூற தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Share it:

Cinema News

Post A Comment:

0 comments: