சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

Share it:

சென்னை : அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய கபாலி திரைப்படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில், அவர் அமெரிக்கா சென்று ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் சென்றிருந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு என்ற வதந்திகளும் வலம் வந்தன. கடந்த 22ம் தேதி வெளியான கபாலி திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூலையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று(24-07-16) இரவு 7.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தவிர்த்த அவர், ரசிகர்களை மட்டும் வணங்கிவிட்டு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.
Share it:

Tech Tamizha

Cinema News

Post A Comment:

0 comments:

Also Read

நடிகை அமலாபாலுடன் விவாகரத்தா? டைரக்டர் விஜய் பேட்டி

அமலாபாலுடன் விவகாரத்து செய்துவிட்டீர்களா? என்ற கேள்விக்கு இயக்குனர் விஜய் பதிலளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே ப

Tech Tamizha