டிராப்பாக்ஸ் (Dropbox) என்றால் என்ன? அதனை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது எப்படி?

Share it:
டிராப் பாக்ஸ் இணைய  சேமிப்பகம்

இவ்வாறு தகவல்களை நாம் இணையத்தில் சேமிப்பதன் மூலம் அவற்றை நாம் ஆயுள் முழுவதும் பாதுகாத்துக்கொள்ள முடிவதுடன், உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் எமது தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.


அந்தவகையில் எமது தகவல்களை இணையத்தில் சேமித்துக் கொள்வதற்கென ஏராளமான சேவைகள் உண்டு. இருந்தாலும் நம்பகமானதும், நிலையானதுமான சேவைகளை தெரிவு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

நம்பகமான இணைய சேமிப்பகம் டிராப்பாக்ஸ்

இணையத்தில் எமது புகைப்படங்கள், ஆவணங்கள், காணொளிகள் மற்றும் கோப்புக்களை சேமிப்பதற்கு என வழங்கப்படும் நம்பகமான சேவைகளுள் டிராப்பாக்ஸ் சேவையும் ஒன்றாகும்.

இதில் நீங்கள் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு 2ஜிபி இடம் இலவசமாக வழங்கப்படும். இதனை விட அதிகமாக தேவையெனின் மாதாந்த அல்லது வருடாந்த சாந்தா மூலம் இதில் இணைய வேண்டும்.

இருப்பினும் டிராப்பாக்ஸ் சேவையில் தரப்பட்டுள்ள Invite Friends எனும் பகுதி மூலம் பெறப்படும் இணைப்பை நண்பர்களுடன் பகிர்வதன் ஊடாக அவர்கள் குறிப்பிட்ட சேவையில் இணையும் பட்சத்தில் உங்களுக்கு மேலதிக இடம் வழங்கப்படும். (ஒரு நண்பர் இணையும் போது 500MB இலவச இடம் உங்களுக்கு கிடைக்கும் இவ்வாறு 16ஜிபி வரை  டிராப்பாக்ஸ் சேமிப்பகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்)

டிராப்பாக்ஸ் கணக்கொன்றை ஆரம்பித்தல் 

கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி நீங்கள் புதிய கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது 2ஜிபி சேமிப்பகத்துடன் மேலதிகமாக 500MB இடவசதியும் வழங்கப்படும்.





இனி பின்வரும் இணைப்பு மூலம் டிராப்பாக்ஸ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.


பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து உங்கள் டிராப்பாக்ஸ் கணக்கை பயன்படுத்தி உள்நுழைந்து கொள்க.

டிராப்பாக்ஸ் சேமிப்பகத்தில் எமது கோப்புக்களை சேமிப்பது எப்படி?



டிராப்பாக்ஸ் செயலியின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் டிராப்பாக்ஸ் இணைய சேமிப்பகத்தில் சேமித்துக் கொள்ளலாம்.




அவ்வாறு சேமிக்கப்பட்டவற்றை கணினியின் ஊடாக https://www.dropbox.com எனும் இணையதளத்திற்கு செல்வதன் மூலமோ அல்லது டிராப்பாக்ஸ் செயலி நிறுவப்பட்ட எந்த ஒரு ஸ்மார்ட் போனின் மூலமாகவோ அந்த கோப்புக்களை மீள பெற்றுக்கொள்ளலாம்.

டிராப்பாக்ஸ் சேவையின் சிறப்பம்சங்கள் 

  • டிராப்பாக்ஸ் இணைய சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்ட எந்த ஒன்றையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான இணைய இணைப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும்.



  • இதில் சேமிக்கப்பட்ட கோப்புக்களை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம் என்றாலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான கோப்புக்களை இணைய இணைப்பு இல்லாத போதும் (Offline Access) பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது.


  • டிராப்பாக்ஸ் செயலியை ஏனையவர்கள் திறந்து உங்கள் கோப்புக்களை பயன்படுத்த முடியாத வகையில் குறிப்பிட்ட செயலிக்கு கடவுச்சொல் இடுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
  • மேலும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பிடிக்கும் புகைப்படங்கள் தானாகவே டிராப்பாக்ஸ் சேமிப்பகத்தில் சேமிக்கும் படி அமைத்துக்கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன பதிவு சுருக்கமாக அமைய வேண்டும் என்பதால் நான் இங்கு அனைத்தையும் சுட்டிக்காட்டவில்லை. நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.
Share it:

Android Tips

Post A Comment:

1 comments:

  1. டிராப்பாக்ஸ் (Dropbox) என்றால் என்ன? அதனை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது எப்படி? - Prabu Hi-Tech Web >>>>> Download Now

    >>>>> Download Full

    டிராப்பாக்ஸ் (Dropbox) என்றால் என்ன? அதனை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது எப்படி? - Prabu Hi-Tech Web >>>>> Download LINK

    >>>>> Download Now

    டிராப்பாக்ஸ் (Dropbox) என்றால் என்ன? அதனை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது எப்படி? - Prabu Hi-Tech Web >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete