வாட்ஸ்ஆப் புது அப்டேட் புது அம்சங்கள் : அப்டேட் பண்ணிட்டீங்களா?? Latest Updates In whatsapp new features

Share it:

உலக பிரபலமான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் மாதம் ஒரு அப்டேட் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. தினசரி அடிப்படையில் அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயனர் எண்ணிக்கை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் சமமான வரவேற்பு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1::வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அப்டேட் மூலம் டாக்குமெண்ட் ஷேரிங், வாய்ஸ் மெயில், ஃபார்மேட்டெட் டெக்ஸ்ட் போன்ற புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2::இந்த அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் வழங்க இருப்பதை உணர்த்தும் செய்திகள் பல மாதங்களாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

3::அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய அம்சங்கள் வாட்ஸ்ஆப் செயலியின் 2.16.229 பதிப்பிலும் ஐஓஎஸ் இயங்குதளத்தின் 2.16.8 பதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

4::வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவருக்கு அழைப்பு மேற்கொள்ளும் போது மறுமுனையில் இருந்து பதில் வராத போது இனி நேரடியாக வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும்

5::முன்னதாக அழைப்பை எடுக்காத போது சாட் விண்டோ ஓபன் ஆகும். இனி மறுமுனையில் அழைப்பை ஏற்காத போது மீண்டும் அழைப்பது மற்றும் வாய்ஸ் மெசேஜ் என இரு ஆப்ஷன்கள் திரையில் தெரியும்.

6::கேன்சல் ஆப்ஷன் ( cancel option) கிளிக் செய்தால் சாட் விண்டோ திறக்கும், மாறாக (Call again) மீண்டும் அழைப்பை விடுக்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் மீண்டும் அழைப்பை மேற்கொள்ள முடியும்.

7::வாய்ஸ் மெயில் அனுப்பும் போது மற்ற சேவைகளில் அனுப்புவதைப் போல் ஆப்ஷனினை கிளிக் செய்து, தகவலைப் பேசியதும் அனுப்பலாம்.

8::ஒரு வேலை வாய்ஸ் மெசேஜ் சரியாக வரவில்லை எனில் அதனினை இடது புறமாக ஸ்வைப் செய்தால் அழிந்து விடும். இதே வழிமுறையினை டிராஃப்ட் மெசேஜ்களுக்கும் செய்ய முடியும்.


Share it:

Android Tips

Whatsapp Tips

Post A Comment:

0 comments: