ன்று அதிகமான ஆவணங்கள் பி.டி.எப் வடிவங்களிலேயே தயாரிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வாட்ஸ்அப் சேவையிலும் கூட பி.டி.எப் (PDF) ஆவணங்களைபகிர்ந்துகொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது
எனவே இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் போன்களில் பி.டி.எப் (PDF) ஆவணங்களை நிர்வகிப்பதற்கான செயலிகளும் உருப்பெற்றுள்ளன.
ஆண்ட்ராய்டு பி.டி.எப் கன்வெர்டர்
அவ்வாறான செயலிகளுள் பி.டி.எப் (PDF) கன்வெர்டர் எனும் செயலியானது சிறந்த வசதிகளை தருகின்றது.
இதனை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாகவே தரவிரக்கிக்கொள்ள முடிவதுடன் புகைப்படங்கள், நீங்கள் விரும்பும் இணையப்பக்கங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் போன்ற எந்த ஒன்றையும் மிக இலகுவாக பி.டி.எப் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
இவைகள் தவிர எண்கள், எழுத்துக்களைக் கொண்டு நீங்கள் உருவாக்கும் குறிப்புக்களை கூட பி.டி.எப்.வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
பி .டி.எப் (PDF)
இதன் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள பி.டி.எப் என்பதை அழுத்துவதன் ஊடாக இந்த செயலி மூலம் நீங்கள் பி.டி.எப் வடிவத்திற்கு மாற்றிய அனைத்தையும் ஒரே பார்வையில் பார்க்க முடியும் .
புகைப்படங்கள் (Images)
உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பிடித்த புகைப்படங்களை நீங்கள் பி.டி.எப் (PDF) வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள Image என்பதை தெரிவு செய்வதன் மூலம் அவற்றை பி.டி.எப் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
கோப்புக்கள் (Files)
அதேபோல் மைக்ரோசாப்ட் வோர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட் மற்றும் ஏனைய ஆவணங்களை பி.டி.எப் (PDF) வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள Files என்பதை சுட்ட்வதன் மூலம் அவற்றை தெரிவு செய்து பி.டி.எப் (PDF) வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
தொடர்புகள் (Contact)
மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள வெவ்வேறு நபர்களின் தொடர்புகளை (Contact) ஒரே பார்வையில் பார்க்கும் வகையில் அவர்களின் மொபைல் இலக்கம், லேண்ட்லைன் இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் என ஒரு எளிமையான பட்டியலாக பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்
பி .டி எப் கன்வெர்டர் செயலியை தரவிறக்க இங்கே சுட்டுக
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: