நாம் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றிற்கு அருகில் இருக்குமாறு வைஃபை ரவுட்டரை வைக்க வேண்டும். இல்லையெனில் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணைய வேகம் சிறப்பாக அமையாது.
நம்மைச் சுற்றி எலக்ட்ரானிக் கருவிகள், வைஃபை சாதனங்கள், செயற்கைக்கோள் சிக்னல்கள், செல்போன் கோபுரங்கள் என பல்வேறு சிக்னல்கள் சுற்றி வருகின்றன. இவை ஒன்றையொன்று இடைமறிக்க வாய்ப்புள்ளது. இதில் ரேடியோ சிக்னல்களின் தாக்கம் வைஃபை சிக்னல்களை அதிகம் பாதிக்கும்.
குறிப்பாக மைக்ரோ ஓவன்கள் வைஃபை ரவுட்டர்களின் சிக்னல்களை பெருமளவு பாதிக்கும். இதுபோன்ற சாதனங்களில் இருந்து வைஃபை ரவுட்டர்களை தொலைவில் வைப்பது, சிறப்பான இணைய வேகத்தை அளிக்கும்.
இதேபோல் ப்ளூடூத் சாதனங்களும் வைஃபை சிக்னல்களை பாதிக்கும். இதனால் ப்ளுடூத் சாதனங்களையும் அருகில் இருக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.
அலங்கார விளக்குகளும் வைஃபை சிக்னல்களை பாதிக்கும். ஏனெனில் அலங்கார விளக்குகள் மின்காந்த புலத்தை உருவாக்கும். இவை வைஃபையின் அதிர்வலைகளை பாதிக்கிறது. மேலும் ப்ளாஷ் விளக்குகள் அருகில் இருக்கும் போது, வைஃபை சாதனங்களை பயன்படுத்தக் கூடாது.
Post A Comment:
0 comments: